Google பயனர்கள் கணக்கு (GOOGLE ACCOUNT) 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் நீக்கப்படும் – Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை
கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ஏற்கனவே மே மாதம் அறிவிப்பை இமெயில் மூலம் பயனர்களுக்கு அனுப்பியது. தற்போது, மீண்டும் கூகுள் இதனை நினைவுப்படுத்தியுள்ளது. பயனற்ற கணக்குகளை சீர் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.