2023/05/08

NHPC ஆணையத்தில் 45 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ITI தேர்ச்சி போதும்!

NHPC ஆணையத்தில் 45 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ITI தேர்ச்சி போதும்!

Apprenticeship Training கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprenticeship Training ஊதிய விவரம்:

 NHPC-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


NHPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ITI -ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit Basis) தேர்வு செய்யயப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


SURVEY Important question

2023/05/07

10th Public Exam Result Link

10th Public Exam Result - 10ஆம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள- TN Board Result /TamilNadu 10th result 2023/10th Board Result




Join WhatsApp group
https://chat.whatsapp.com/L3KNsv3ndzJLD6Qtc4hLqk









2023/05/06

முன்னிடைச்சொற்கள் (Prepositions)



நேர முன்னிடைச்சொற்கள் (Prepositions of Time)


முன்னிடைச்சொற்கள் என்றால் என்ன? முன்னிடைச்சொற்கள் என்றால் வாக்கியங்களின் இடையே பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்பாக பயன்படும் சொற்களாகும். அதனாலேயே இவற்றை (முன்+இடை+சொற்கள்) முன்னிடைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

முன்னிடைச்சொற்கள் எப்பொழுதும் பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்னால் மட்டுமே பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (வினைச்சொற்களுக்கு முன்னால் பயன்படுவதில்லை.)

எடுத்துக்காட்டாக:

Subject + to be + Preposition + Noun/Pronoun
The book is + on + the table.
The letter is + under + your English book.

"முன்னிடைச்சொற்கள்" தனித்த ஒற்றைச் சொல்லாகவும், கூட்டுச் சொற்களாகவும் இரண்டு வகையில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

ஒற்றை முன்னிடை சொல் (one word)

I am staying at home.
I spoke to her on wednesday morning.
I bought this computer in the summer.

முன்னிடை கூட்டுச்சொற்கள் (a group of word)

The cat is on the left of the dog.
The driver is in front of passengers.
They are at the top of stairs.

முன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை, பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுபவைகள் (at home, on water), சுட்டுப்பெயர்களுக்கு முன்பாக படுபடுபவைகள் (in it, next to me), முற்றுவினையில்லா சொற்றொடர்களுக்கு (noun phrase) முன்பாக பயன்படுபவைகள் (across from the tall building) போன்றவைகளாகும்.

இந்த முன்னிடைச்சொற்களில் மூன்று பிரிவுகள் உள்ளன.

1. நேர முன்னிடைச்சொற்கள் (Time Prepositions)
2. இட முன்னிடைச்சொற்கள் (Place Prepositions)
3. திசை முன்னிடைச்சொற்கள் (Direction Prepositions)

இம்மூன்று பிரிவுகளையும் ஒவ்வொரு பாடமாக கற்போம். இன்றைய பாடத்தில் "நேர முன்னிடைச்சொற்கள்" பற்றி மட்டும் பார்ப்போம்.

நேர முன்னிடைச்சொற்கள் (Prepositions of Time)

இந்த "நேர முன்னிடைச்சொற்கள்" நேரத்தை குறித்துக்காட்ட பயன்படுவைகள் என்றாலும், நேரத்துடன் தொடர்புடைய கிழமை, மாதம், ஆண்டு, காலம் போன்றவற்றை குறிக்கவும் பயன்படும். இவற்றை "கால முன்னிடைச்சொற்கள்" என்றும் அழைப்பர்.

"at" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தை (a specific time) குறிப்பிடும் முன்னிடைச்சொல்லாக "at" பயன்படும்.

at 3 o'clock
at 9:00am
at noon
at dinnertime
at bedtime
at sunrise
at sunset
at the moment
at night
at midnight
at daybreak
at the weekend
at the same time
at present
at Chritmas/Easter

"in" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்

"in" மாதங்களை (Months) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.

in January
in February
in March
in April
in May
in June
in July
in Augest
in September
in October
in November
in December

"in" பருவங்களை (Season) குறிப்பிடும் முன்னிடைச் சொல்லாகப் பயன்படும்.

in Spring
in Summer
in Winter
in Autumn

இவற்றை சுட்டிடைச்சொல் "the" இட்டும் பயன்படுத்தலாம். ஆனால் "autumn" என்பதற்கு மட்டும் சுட்டிடைச்சொல் "the" பயன்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

in the spring (in the springtime)
in the summer (in the summertime)
in the winter (in the wintertime)
in autumn (in autumntime)

குறிப்பு: பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் "autumn" என்றழைப்பதை, அமெரிக்க ஆங்கிலத்தில் "fall" என்று அழைப்பர்.

"in" ஆண்டுகளை (Years) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.

in 2008
in 1990
in 2009

அதேவேளை in last year, in next year, in every year என்று குறிப்பிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இவற்றைக் குறிப்பிடும் போது முன்னிடைச்சொல் இன்றியே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

last year
next year
every year

"in" ஒரு நாளின் நேரங்களை (Times of the Day) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.

in the morning
in the afternoon
in the evening
  • at night 
அதேவேளை "இரவில்" என்று குறிப்பிடும் பொழுது "at night" என்றே குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (in night / in the night என்று குறிப்பதில்லை.)

மேலும் சில "in" முன்னிடைச்சொல்லின் பயன்பாடுகள்.

in the next century
in the Ice Age
in the past
in a few days
in a couple of months

"on" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்

திகதியை (Dates) குறிப்பிட முன்னிடைச்சொல்லாக "on" பயன்படும். அதேவேளை திகதியை தவிர்த்து மாதத்தையோ, ஆண்டையோ, அல்லது மாதத்துடன் ஆண்டை மட்டும் குறிப்பிடுவதாயின் "in" பயன்படுத்த வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

on January 3
on January 3, 2001
on 25 Dec. 2010
on 15th Augest 2009

கிழமை நாட்களை (Days of week) குறிப்பிட முன்னிடைச் சொல்லாக "on" பயன்படும்.

on Sunday
on Monday
on Tuesday
on Wednesday
on Thursday
on Friday
on Saturday

on Saturday morning
on Sunday afternoon
on Monday evening

விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களை (Holydays and Special days) குறிப்பிட முன்னிடைச்சொல் "on" பயன்படும்.

on Mother's day
on Velentine's day
on Christmas Eve/Day
on Independence Day
on New Year's Eve
on my birthday
on the first day of the school year
  • at Christmas
குறிப்புமேலுள்ள பயன்பாட்டில் கிறிஸ்மஸ் நாளை மட்டும் "at Christmas" என்றும் பயன்படுத்தும் வழமை உள்ளது. இது ஒரு சிறப்பு பயன்பாடாகும்.

வாக்கியங்களில் நேர முன்னிடைச்சொற்கள்

மேலே முன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்கள் பற்றி கற்றோம். அவை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுக்களின் ஊடாகப் பார்ப்போம்.

The stars shine at night
நட்சத்திரங்கள் மின்னும் இரவில்

In England, it often snows in December.
இங்கிலாந்தில், அடிக்கடி பனிக்கொட்டும் டிசம்பரில்.

Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்?

I will be there after work.
நான் அங்கிருப்பேன் வேலைக்கு பிறகு

I will be there around 3 pm
நான் அங்கிருப்பேன் கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில்.

I will be there before I go to school.
நான் அங்கிருப்பேன் பாடசாலைக்கு போவதற்கு முன்பு.

I have been riding my bicycle for 2 hours.
நான் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் எனது மிதிவண்டியை 2 மணித்தியாளங்களாக.

I will be there during your class.
நான் அங்கிருப்பேன் உனது வகுப்பு (நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்) நேரத்தில்.

I will be there for your birthday.
நான் அங்கிருப்பேன் உனது பிறந்த நாளைக்காக

I wasn't there for the past 2 months.
நான் அங்கிருக்கவில்லை கடந்த இரண்டு மாதங்களாக

I didn't see her since I was 10 years old.
நான் பார்க்கவில்லை அவளை எனது பத்து வயதில் இருந்து.

I will not be home until 7:00 PM.
நான் இருக்கமாட்டேன் வீட்டில் 7 மணி வரை.

I will be there within 2 hours.
நான் அங்கிருப்பேன் இரண்டு மணித்தியாளங்களுக்குள்.

இப்பாடத்துடன் தொடர்புடைய முன்னிடைச்சொற்களின் அட்டவணை (List of Prepositions) கொடுக்கப்பட்டுள்ளது. உச்சரிப்பு பயிற்சிக்கான ஒலிதக் கோப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.



2023/05/05

ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)



ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)


பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் "nouns” என அழைக்கப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் "nōmen" (பெயர்) என்ற சொல்லில் இருந்து மருவி ஆங்கிலத்தில் பயன்படும் சொல்லாகும்.

ஆங்கிலப் பெயர்சொற்கள் (Nouns) என்பன மனிதர்கள், இடங்கள், பொருற்கள், உயிரினங்கள், உணர்வுகள் போன்றவற்றை குறிப்பதற்கான "பெயர்கள்" அல்லது "பெயர்ச்சொற்கள்" ஆகும்.

இப்பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகளாவன:

 

 

Common Nouns

Proper Nouns

Countable Nouns

Uncountable Nouns

Collective Nouns

Concrete Nouns

Abstract Nouns

Compound Nouns


மேலும் இப்பெயர்ச்சொற்கள் பற்றி பார்ப்போம்.

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்

பொதுவான பெயர்சொற்கள் எனும் போது மக்கள், இடங்கள், பொருட்கள், உயிரினங்கள் அனைத்தினதும் பெயர்கள், பொதுவான பெயர்ச்சொற்கள் தான். தமிழில் இதனை "பொதுப் பெயர்ச்சொற்கள்" என அழைப்பதும் உண்டு.

இடங்கள்:
  • bank = வங்கி
  • school = பாடசாலை
  • city = பட்டணம்
  • shop = கடை
  • park = பூங்கா
பொருட்கள்:
  • pencil = பென்சில்
  • book = பொத்தகம்
  • chair = கதிரை
  • table = மேசை
  • bag = பை
உயிரினங்கள்:
  • tiger = புலி
  • bear = கரடி
  • fish = மீன்
  • snake = பாம்பு
  • dog = நாய்
மேலும் பொதுவானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்

குறிப்பிட்ட ஒரு பொருள், இடம், மனிதன், மதம், மொழி, மாதம், ஊர், நாடு போன்றவற்றின் உரித்தான பெயர்களையே "உரித்தானப் பெயர்ச்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன. உரித்தானச்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இடங்கள்:
  • London = இலண்டன்
  • Jaffna = யாழ்ப்பாணம்
  • California = கலிபோனியா
  • Kilinochchi = கிளிநொச்சி
  • Madurai = மதுரை
மனிதர்கள்:
  • Sarmilan = சர்மிலன்
  • Surya = சூர்யா
  • Tamilvaanan = தமிழ்வாணன்
  • Kavitha = கவிதா
  • David = டேவிட்
மொழிகள்:
  • Tamil = தமிழ்
  • English = ஆங்கிலம்
  • French = பிரஞ்சு
  • Chinese = சீனம்
  • Cantonese = கந்தோனிஸ்
மதங்கள்:
  • Hindu = இந்து
  • Christian = கிறிஸ்தவம்
  • Islam = இஸ்லாம்
  • Buddhist = பௌத்தம்
  • Taoism = டாவோயிசம்
மேலும் உரித்தானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.
  Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்

கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் தான்.

எடுத்துக்காட்டாக:
  • apple = குமழிப்பழம்
  • dollar = டொலர்
  • book = பொத்தகம்
  • spoon = கரண்டி
  • computer = கணனி
மேலும் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.
  Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாதச் சொற்கள் எல்லாமே "கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள்"  ஆகும்.

எடுத்துக்காட்டாக:
  • love = அன்பு / காதல்
  • water = தண்ணீர்
  • happiness = மகிழ்ச்சி
  • smoke = புகை
  • milk = பால்
மேலும் கணக்கிடாமுடியாப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.
  Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்

கூட்டம்  அல்லது குழுக்களின் (பலரின் அல்லது பலதின்) கூட்டினை குறிக்கும் பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • army = இராணுவம் (பல வீரர்களை குறிக்கும் சொல்)
  • class = வகுப்பு (பலர் கற்கும் இடம்)
  • gang = கும்பல் (பலரை குறிக்கும்)
  • colony = குடியேற்றப் பகுதி/ குடியேற்ற நாடு
  • school = பாடசாலை 
மேலும் கூட்டுப்பெயர்ச்சொற்கள் பாடத்தைப்  பார்க்கவும்.

Concrete Nouns - திடப் பெயர்சொற்கள்

கண்ணால் பார்க்கவும், கையால் தொடவும் கூடியவற்றை "திடப் பெயர்சொற்கள்" எனலாம். இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப் பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக:
  • tree = மரம்
  • ball = பந்து
  • nose = மூக்கு
  • face = முகம்
  • book = பொத்தகம்
மேலும் திடப் பெயர்ச்சொற்கள் பாடத்த்தினைப் பார்க்கவும்.

Abstract Nouns - நுண் பெயர்ச்சொற்கள்

நுண் பெயர்ச்சொற்கள் என்பன கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாத நுண்மையானவைகளாகும். அதனாலேயே அவற்றை "நுண் பெயர்ச்சொற்கள்" எனப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:
  • skill = திறமை
  • opinion = கருத்து
  • law = சட்டம்
  • ego = தன்முனைப்பு
  • peace  = அமைதி
மேலும் நுண் பெயர்ச்சொற்கள் அட்டவணை பார்க்கவும்.

Compound Nouns - கலவைப் பெயர்சொற்கள்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் சொற்களை அல்லது பெயர்களை "கலவைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • blackboard = கரும்பலகை
  • homeland = தாய்நிலம்
  • swimming pool  = நீச்சல் தடாகம்
  • brother-in-law = மைத்துனர்
  • haircut = தலைமயிர் வெட்டுதல்
ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்திருப்பதன் காரணம்; அவற்றை மாணவர்கள் எளிதாக கற்பதற்காகவே. மேலே வழங்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்கள் வகையில் இல்லாத "Gerund Nouns", "Predicate Nouns", "Noun as Adjective" போன்றவைகளும் உள்ளன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம்.

இன்றைய பெயர்ச்சொற்கள் பாடத்துடன் தொடர்புடைய பாடங்களை கீழே பார்க்கவும்.



2023/05/04

CHN MOST IMPORTANT QUESTIONS

CHN MOST IMPORTANT QUESTIONS

UNIT 1
1.PARTS OF COMPUTER
2.BUS STANDARDS
3.HARD DISK

UNIT 2
1.DOT MATRIX , LASER PRINTER
2.WIRELESS KEYBOARD
3.LCD 

UNIT 3
1.MOBILE PHONE COMPONENTS
2.MOBILE PHONE ASSEMBLING/DISASSEMBLING
3 MOBILE PHONE ROUTING

UNIT 4
1.TOPOLOIES 
2.NETWORKS
3. OSI LAYERS 

UNIT 5
1.802.X PROTOCOL
2.INTERNET PROTOCOL
3.APPLICATION LAYER PROTOCOLS


3 MARKS REFER XEROX MATERIALS

ALL THE BEST

Engineering CHEMISTRY II important question

Engineering  
Chemistry - II

Important Board Exam Questions 

PART - A

                Unit - I
1.Define Oxidation / Reduction
2. Give two examples for Strong / Weak Electrolyte
3.What is 1 Faraday? 
4.Give one example for an Electro Chemical Cell
5.Write the representation of Daniel Cell. 
6.Give two examples for Primary / Secondary Battery. 

                     Unit- II
1.Name the types of Corrossion
2.Mention the Gases causing Dry Corrossion
3.Mention any two metals used as Sacrificial anode for the prevention of corrossion of Iron
4.Define Paints / Varnishes. 
5.Name any two Luminophores
6.What are the uses of Aluminium Paint? 

                  Unit - III
1.Define Calorie /  Calorific Value of a Fuel
2.Define Fuel What is the energy produced in the combustion of Fuel. 
3.Write the composition of Power Alcohol
4.What Is cracking of Hydrocarbons? 
5.What is a Rocket Propellant
6.Mention the types of Solid / Liquid Rocket Propellants. 

               UNIT - IV
1.Name the salts Causing Carnonate / Non - Carbonate Hardness. 
2.What is EDTA / TDS
3What are the types of  Rain Water Harvesting? 
4.Name the Acid and Base used for regeneration of Acidic /  Basic Resins respecticely. 
5.What is the semipermeable membrane used in the Reverse Osmosis Process? 
6.Name the Salts causing Boiler Scales. 

                     UNIT - V
1.Mention  any two Air / Water Pollutants
2.Name any three Gases Causing Global Warming / Acid Rain / Ozone Depletion
3.How is the growth of Algae controlled in Water/Name any two Algaecides
4.Mention the various types of Solid wastes. 
5.How are solid wastes Classified
6.What is the correct method of disposal of Non Bio degradable  Solid wastes. 
7.Mention any two Green House Gases.




பொறியியல் வேதியியல் - II

வாரிய தேர்விற்கான முக்கிய வினாக்கள்

 பகுதி அ 

                      அலகு - I 1.ஆக்சிஜனேற்றம் / ஆக்சிஜன் ஒடுக்கம் வரையறு 
2. வீரியமிக்க / வீரியம் குறைந்த மின்பகுளிகளுக்கு இரு உதாரணங்கள் தருக 
3.ஒரு  ஃபாரடே  என்றால் என்ன? 
4.மின் வேதியியல் கலனுக்கு ஓர் உதாரணம் தருக 5.டேனியல் மின்கலனை குறிப்பிடும் முறையை எழுதுக 6.முதல் நிலை / இரண்டாம் நிலை மின்கலன்களுக்கு இரு உதாரணங்கள் தருக 
                அலகு - II
1.அரிமானத்தின் வகைகளை குறிப்பிடு 
2.உலர் அரிமானத்தை உண்டாக்கும் வாயுக்கள் யாவை? 3. இரும்பை அரிமானத்தி லிருந்து பாதுகாக்க தியாக நேர்மின்முனையாக செயல் படும் உலோகங்கள் இரண்டினை குறிப்பிடுக.
4.பெயிண்டுகள் / வார்னிஷ்கள் வரையறு 
5.ஒளி உமிழும் பொருட்கள் இரண்டினை குறிப்பிடுக.
6.அலுமினியம் பெயிண்டின்
 பயன்கள் யாவை? 

              அலகு - III
1. கலோரி /ஓர் எரிபொருளின் கலோரி மதிப்பு வரையறு 2.எரிபொருள் வரையறு.எரி பொருள் எரிவதால் வெளியிடப்படும் ஆற்றல் யாது? 
3.பவர் ஆல்கஹாலின் இயைபு யாது? 
4. ஹைட்ரொ கார்பன்களை பிளத்தல் என்றால் என்ன? 
5.இராக்கெட் உந்து பொருட்கள் என்றால் என்ன? 
6.திட  / திரவ இராக்கெட் உந்து பொருட்களின் வகைகள் யாவை?

                   அலகு - IV
1.கார்பனேட் / கார்பனேட் அல்லாத கடினத்தன்மையை உண்டாக்கும் உப்புக்கள் யாவை? 2.விரிவாக்கம் எழுதுக 
i. EDTA ii TDS
3.மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை? 4.அமில /  கார ரெசின்களை புதுப்பிக்க பயன்படும் அமிலம் / காரம் குறிப்பிடுக 5.பின்னோக்கு சவ்வூடு பரவுதலில் பயன்படும் ஒரு கூறு புக விடும் சவ்வு யாது? 6.கொதிகளங்களில் செதில் படிதலை உண்டாக்கும் உப்புகள் யாவை ? 

                அலகு - V
1. காற்று / நீர் மாசுபடுத்தும் பொருட்கள் இரண்டினை குறிப்பிடுக 
2.அமில மழை / பூமி வெப்பமடைதல் / ஓஸோன் மண்டல குறைபாடு உண்டாகும் வாயுக்களின் பெயர்களை குறிப்பிடுக.
3.நீரில் பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இரண்டினை குறிப்பிடுக.or
பாசிகொல்லிகள் இரண்டினை குறிப்பிடுக
 4.திட கழிவு பொருட்களின் பல்வேறு வகைகள் யாவை? 
5.திட கழிவு பொருட்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது
6.மக்காத வகை திடக்கழிவுப்பொருட்களை அகற்றும் சரியான முறை யாது? 
7.பசுமை இல்ல வாயுக்கள் இரண்டினை குறிப்பிடுக

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...