2023/12/13

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


JOB FAIR 26-12-2023 தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்

2023/12/09

மாதசம்பளம் ரூ.30,000 To ரூ.80,000.. சென்னையில் சூப்பர் வேலை (Society for Electronic Trasnsactions and Security or SETS)

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) அலுவலகத்தின் ஒருபகுதியாக இது இயங்கி வருகிறது. மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமால் இது உருவாக்கப்பட்டது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளத்தை பாதுகாப்பது தொடர்பான வடிவமைப்புகளை உருவாக்கும் பணியை இது செய்து வருகிறது.

காலியிடங்கள்: மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் (கன்சல்டன்ட் மோட்-ஹார்டுவேர்) பணிக்கு ஒருவர், ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு எம்டெக், எம்இ படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க் செக்யூரிட்டி, எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ், விஎல்எஸ்ஐ டிசைன், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு பிஇ/பிடெக் பிரிவில் ECE, EEE, E&I, CSE, IT, ICT படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.

மாதசம்பளம்: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் முதல் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள்  https://www.setsindia.in/                 இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.