2023/12/09

மாதசம்பளம் ரூ.30,000 To ரூ.80,000.. சென்னையில் சூப்பர் வேலை (Society for Electronic Trasnsactions and Security or SETS)

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) அலுவலகத்தின் ஒருபகுதியாக இது இயங்கி வருகிறது. மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமால் இது உருவாக்கப்பட்டது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளத்தை பாதுகாப்பது தொடர்பான வடிவமைப்புகளை உருவாக்கும் பணியை இது செய்து வருகிறது.

காலியிடங்கள்: மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் (கன்சல்டன்ட் மோட்-ஹார்டுவேர்) பணிக்கு ஒருவர், ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு எம்டெக், எம்இ படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க் செக்யூரிட்டி, எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ், விஎல்எஸ்ஐ டிசைன், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு பிஇ/பிடெக் பிரிவில் ECE, EEE, E&I, CSE, IT, ICT படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.

மாதசம்பளம்: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் முதல் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள்  https://www.setsindia.in/                 இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

2023/10/21

Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

Google பயனர்கள் கணக்கு (GOOGLE ACCOUNT) 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் நீக்கப்படும் – Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை

கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ஏற்கனவே மே மாதம் அறிவிப்பை இமெயில் மூலம் பயனர்களுக்கு அனுப்பியது. தற்போது, மீண்டும் கூகுள் இதனை நினைவுப்படுத்தியுள்ளது. பயனற்ற கணக்குகளை சீர் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2023/10/12

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist) பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA / Master Degree/ BE/ BTec / MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

மேலும் தகவலை பெற


NOTIFICATION LINK


APPLY LINK

2023/10/09

மத்திய அரசில் ரூ.70,000 சம்பளத்தில் வேலை!

Ministry of Health and Family Welfare - ன் கீழ் Department of Health Research ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research

பணியின் பெயர் :
Scientist C
Junior Health Economist

பணியிடங்கள் - 5

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2023 விண்ணப்பிக்கும் முறை - Email 
சம்பளம் - ரூ.70,000 வரை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து departmentofhealth research@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



2023/10/06

டிடிஃஎப் வாசன் யூடுயுப் சேனல் கணக்கை முடக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவு.


டிடிஃஎப்  வாசன் யூடுயுப் சேனல் கணக்கை முடக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவு. 

பைக்  ஐ எரித்து விட உத்தரவு .

பொது மக்கள் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 


TNPSC: October Result Declaration schedule 2023

2023 அக்டோபர் மாதம் Civil Judge, Combined Geology Subordinate Services Exam, Junior Scientific Officer மற்றும் Post of Road Inspector Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.
5,446 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற Group – 2 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 1 mains தேர்வுகளுக்கான முடிவுகளும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற 14 வகையான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை TNPSC வெளியிட்டுள்ளது. 

2023/10/04

நோபல் பரிசு 2023 இன்று உடலியல் அல்லது மருத்துவத்திற்கு வழங்கப்பட்டது


அக்டோபர் 2

Nobel Prize: உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2023 இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது


2023 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கு கோவிட்-19 க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.


நோபல் பரிசை வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம், மற்றும் பதக்கமும் அளித்து கவுரவிக்கப்படும். மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் இனிவரும் நாட்களில் வரிசையாக அறிவிக்கப்பட உள்ளது.

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவு 2025 எதிர்பார்க்கப்படும் தேதி

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு முடிவுகள் மே 2025 இல் எதிர்பார்க்கப்படுகின்றன.எஸ்பிஐ ஜேஏ / எழுத்தர்13700 க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் கால...