2023/04/09

வேலை வாய்ப்பு நிறைந்த வேளாண்மை படிப்பு

வேலை வாய்ப்பு நிறைந்த வேளாண்மை படிப்பு
பொறியியல் படிப்புகள் தனது கவர்ச்சியை இழக்க, கடந்த
ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் விரும்பப்படும் படிப்புகளில் ஒன்றாக 
மாறி இருக்கிறது, வேளாண் படிப்புகள். கொரோனா பிரச்னைக்கு ப்பின்
வேளாண்மைக்கான மவுசு கூடி இருக்கிறது. 
அக்ரி படிப்பில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல்
அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை முதன்மையாகப்
படித்தவர்கள் மட்டுமே சேரலாம் என்று இருக்கிறது. ஆனால், 
அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி போன்ற பாடங்களில்
சேர கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களைப் படித்தவர்களும்
சேரலாம் என்பதையும் கவனிக்க வேண்டும். 
 யார் விண்ணப்பிக்கலாம்?
பொதுப் பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்
அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 55 சதவிகித 
மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 50 சதவிகித 
மதிப்பெண்ணையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவிகித 
மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் 
மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள், தேர்ச்சி பெற்றிருந்தாலேயே
விண்ணப்பிக்கலாம்.

அக்ரி படிப்பில் சேர எளிய வழிகள்... 
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதுவது. தமிழ்நாடு வேளாண் 
பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொண்டு வாய்ப்பைப்
பெறுவது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் 
தேர்வு எழுத, பன்னிரண்டாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் 
என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நுழைவுத் 
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, இந்தியாவில் உள்ள சிறந்த
வேளாண் கல்லூரிகளில் சேரலாம். இந்த நுழைவுத்தேர்வு குறித்து 
விவரங்கள் பெற https://icar.nta.nic.in/WebInfo/Public/Home.aspx என்ற 
இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் தவிர, 
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல்
மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும்
தனியே விண்ணப்பித்து, வேளாண்மைப் படிப்பில் சேரலாம். 


வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்: 
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வேளாண்மை
பிஎஸ்.சி. (ஹானர்ஸ்) தோட்டக்கலை
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வனவியல் 
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் 
(ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்) 
பி.டெக். - வேளாண் பொறியியல்
பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு
பி.டெக். - உணவுத் தொழில்நுட்பம் (ஃபுட் டெக்னாலஜி)
பி.டெக். - உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி)
பி.டெக். - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்
பி.எஸ்சி. - வேளாண் வணிக மேலாண்மை
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 
14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் 
கல்லூரிகளே. இதைத்தவிர, 29 சுயநிதிக்கல்லூரிகள் உள்ளன. 
இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரலாம். 
வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்:
1 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
கோயம்புத்தூர் - 641 003
2 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
மதுரை - 625 104
3 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், 
தூத்துக்குடி - 628 252
4 அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி 
நிலையம், நாவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி - 620 027
5 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், 
திருவண்ணாமலை - 606 753
6 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, 
புதுக்கோட்டை - 622 104
7 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, 
ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 902
8 தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
கோயம்புத்தூர் - 641 003
9 தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
பெரியகுளம், தேனி - 625 604
10 தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (பெண்கள்), 
நாவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி - 620 027
11 வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
கோயம்புத்தூர் - 641 003
12 வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
குமுளுர், பல்லபுரம், திருச்சிராப்பள்ளி - 621 712 
13 வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
மேட்டுப்பாளையம் - 641 301
14 சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
மதுரை - 625 104

வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வில்
கலந்துகொள்ள விண்ணப்பித்து, அரசு 
ஒதுக்கீட்டில் இட வாய்ப்பு பெறுகிறவர்
களுக்குக் கட்டணம் மிகவும் குறைவு. அரசு 
உறுப்புக் கல்லூரிகளில் 1600 இடங்களும், 
இணைப்புக் கல்லூரிகளான சுயநிதிக் 
கல்லூரிகளில் 3100 இடங்களும் உள்ளன. 
வேளாண் படிப்பைப் படிக்க வேண்டும்
என்ற ஆர்வம் உள்ளவர்கள், இரண்டு 
ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர 
விண்ணப்பிக்கலாம். மூன்று அரசுக் 
கல்லூரிகளிலும், எட்டு சுயநிதிக் கல்லூரிகளில்
டிப்ளமோ படிப்பு உள்ளது. இதையும்
மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு குறித்த
மேலும் விவரங்களுக்கு https://tnauonline.in/
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் 
தோட்டக்கலை பட்டப்படிப்பும், பட்டயப் படிப்பும் உள்ளன. ஆன்லைன் 
வழியே விண்ணப்பிக்க https://annamalaiuniversity.ac.in/adm/index.php
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும்போது, அரசு 
ஒதுக்கீட்டு இடங்கள், சுயநிதி ஒதுக்கீட்டு இடங்கள் என இரண்டு 
பிரிவுகள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டில் இடம்பெறும்போது, கட்டணம்
40,000 ரூபாய்க்குக் குறைவு. சுயநிதி ஒதுக்கீட்டில் சேரும்போது, 
கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும்
தெரிந்துகொள்ளவும்.
வேலை வாய்ப்பு: வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பாளர், 
கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனைப் பிரதிநிதி, 
வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் 
கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் 
வல்லுநர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் 
செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் 
கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள்
போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள்
வேளாண் படிப்பைத் தேர்வு செய்து, பிரகாசமான எதிர்காலத்தைப் பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக