2023/04/08

POLYTECHNIC படிப்பு 🤝🤝

 Whatsapp

https://chat.whatsapp.com/DrvAt802WOm038E0ESM0zS

எளிதில் வேலை வாய்ப்பைப் பெற 
பாலிடெக்னிக் படிப்புகள்!
பன்னிரண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சாச்சு. பையனும் நல்ல 
மார்க் எடுத்திருக்கிறான். ஆனால் இப்போது இன்ஜினீயரிங் சேர்த்து 
படிக்க வைக்கலாம் என்றால் முடியாத நிலை. இப்படிப்பட்ட 
நிலையில் இருப்பவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகள் பெரிய
அளவில் உதவும்.2 வருசம் அப்புறம் என்ன வேலைக்கு போலாம்
பாலிடெக்னிக் படிப்பில் யார் சேரலாம்?
பொதுவாக, பாலிடெக்னிக்கில் சேர 10 ஆம் வகுப்புத் தேர்வில்
தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.பிளஸ் டூ-வில் கணிதம், 
இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்காமல் மூன்று வருட படிப்பாக 
பாலிடெக்னிக்கில் சேர்ந்துவிட முடியும். பிளஸ் டூ-வில் கணிதம், 
இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்தவர்கள், நேரடியாக 
இரண்டாம் ஆண்டில் சேர்ந்துவிடலாம். 
பாலிடெக்னிக்கில் என்னென்ன படிப்புகள் உள்ளன?
பாலிடெக்னிக்கில் ஆறு படிப்புகள் முதன்மையாக உள்ளன. 
அவை கட்டுமானத் தொழில்நுட்பம் (சிவில்), மெக்கானிக்கல், 
எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல்
இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி. 
இந்த எண்ணற்ற பிரிவுகளும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. 
உதாரணத்துக்கு ஆட்டோமொபைல்
இன்ஜினீயரிங், மெக்ட்ரானிக்ஸ் போன்ற படிப்புகள் இருக்கின்றன. 
இதைத் தவிர, சிறப்பு படிப்புகளாக கெமிக்கல் இன்ஜினீயரிங், 
டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங், லெதர் இன்ஜினீயரிங், பிரின்டிங்
டெக்னாலஜி போன்ற படிப்புகளும் இருக்கின்றன. மாணவர்களுக்கு 
எந்தப் பிரிவில் ஆர்வம் இருக்கிறதோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து 
படிக்கலாம்.
செய்முறை பயிற்சியும் வேலை வாய்ப்பும்
பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள் அதிக அளவில் செய்முறை
சார்ந்த பயிற்சிகளாகவே இருக்கின்றன. இந்தப் பயிற்சிதான்
பாலிடெக்னிக் டிப்ளமோ படித்த உடனே ஏதேனும் ஒரு தொழில்
நிறுவனத்தில் வேலை கிடைக்க உதவுகிறது. 
ஏன் பாலிடெக்னிக் படித்தவுடன் வேலை கிடைக்கிறது?
பொதுவாக, பி.இ படித்தவர்கள் ஒயிட் காலர் ஜாப்பை தான்
விரும்புகிறார்கள். ஆனால் பாலிடெக்னிக் படித்தவர்கள். அப்படி 
அல்ல, எக்ஸிகியூட்டிவ்வாகவும் செயல்படுவார்கள், லேபராகவும்
செயல்படுவார்கள். மேலும், எளிதில் மிடில் லெவல் வேலைக்கு (சூப்பர்வைஸிங் பணிகளுக்கு) பொருத்தமாக இருக்கிறார்கள். இதனால்
தொழில்நிறுவனங்கள் பெருமளவில் விரும்புவது பாலிடெக்னிக்கில்
டிப்ளமோ படித்தவர்களைத் தான். பாலிடெக்னிக் பட்டயப்
படிப்பு(Diploma) முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு 
பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வ்து பயிலலாம்.
பாலிடெக்னிக் படிப்புக்கான கட்டணம்
 அரசு பாலிடெக்னிக்கில் கல்விக் கட்டணம் என்று பார்த்தால்
டியூஷன் ஃபீஸ் எதுவுமில்லை. மேம்பாட்டுக் கட்டணம், சிறப்புக் 
கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை எல்லாம் சேர்த்தால், 
ஆண்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் வரை ஆகும். அரசு 
பாலிடெக்னிக்கில் மொத்தம் 10,000 ரூபாய்க்குள் டிப்ளமோ படிப்பையே
படித்து முடித்துவிடலாம். இதைத் தவிர, போக்குவரத்து இலவசம், 
ரயில் கட்டணச் சலுகை எல்லாம் இருக்கின்றன. 
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்களும் இலவசமாக 
வழங்கப்படுகின்றன. தனியார் பாலிடெக்னிக்கில் சேர்ந்தால்
ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் கட்டணமாகச் செலுத்த வேண்டி 
இருக்கும். 
கல்வி உதவித்தொகை
பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிப்பவர் தனது குடும்பத்தில்
முதலாவது பட்டதாரியாக இருந்தால், கல்வி உதவித்தொகை
கூடுதலாகக் கிடைக்கும். விடுதியில் தங்கிப் படித்தாலும் உதவித்தொகை அதிகமாகக் கிடைக்கும். விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து படித்தாலும்
தனி உதவித்தொகை கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக