நேர முன்னிடைச்சொற்கள் (Prepositions of Time)
முன்னிடைச்சொற்கள் எப்பொழுதும் பெயர்சொற்களுக்கும் மற்றும் சுட்டுப்பெயர்களுக்கும் முன்னால் மட்டுமே பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (வினைச்சொற்களுக்கு முன்னால் பயன்படுவதில்லை.)
எடுத்துக்காட்டாக:
Subject + to be + Preposition + Noun/Pronoun
The book is + on + the table.
The letter is + under + your English book.
"முன்னிடைச்சொற்கள்" தனித்த ஒற்றைச் சொல்லாகவும், கூட்டுச் சொற்களாகவும் இரண்டு வகையில் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
ஒற்றை முன்னிடை சொல் (one word)
I am staying at home.
I spoke to her on wednesday morning.
I bought this computer in the summer.
முன்னிடை கூட்டுச்சொற்கள் (a group of word)
The cat is on the left of the dog.
The driver is in front of passengers.
They are at the top of stairs.
முன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை, பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுபவைகள் (at home, on water), சுட்டுப்பெயர்களுக்கு முன்பாக படுபடுபவைகள் (in it, next to me), முற்றுவினையில்லா சொற்றொடர்களுக்கு (noun phrase) முன்பாக பயன்படுபவைகள் (across from the tall building) போன்றவைகளாகும்.
இந்த முன்னிடைச்சொற்களில் மூன்று பிரிவுகள் உள்ளன.
1. நேர முன்னிடைச்சொற்கள் (Time Prepositions)
2. இட முன்னிடைச்சொற்கள் (Place Prepositions)
3. திசை முன்னிடைச்சொற்கள் (Direction Prepositions)
இம்மூன்று பிரிவுகளையும் ஒவ்வொரு பாடமாக கற்போம். இன்றைய பாடத்தில் "நேர முன்னிடைச்சொற்கள்" பற்றி மட்டும் பார்ப்போம்.
நேர முன்னிடைச்சொற்கள் (Prepositions of Time)
இந்த "நேர முன்னிடைச்சொற்கள்" நேரத்தை குறித்துக்காட்ட பயன்படுவைகள் என்றாலும், நேரத்துடன் தொடர்புடைய கிழமை, மாதம், ஆண்டு, காலம் போன்றவற்றை குறிக்கவும் பயன்படும். இவற்றை "கால முன்னிடைச்சொற்கள்" என்றும் அழைப்பர்.
"at" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தை (a specific time) குறிப்பிடும் முன்னிடைச்சொல்லாக "at" பயன்படும்.
at 3 o'clock
at 9:00am
at noon
at dinnertime
at bedtime
at sunrise
at sunset
at the moment
at night
at midnight
at daybreak
at the weekend
at the same time
at present
at Chritmas/Easter
"in" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்
"in" மாதங்களை (Months) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in January
in February
in March
in April
in May
in June
in July
in Augest
in September
in October
in November
in December
"in" பருவங்களை (Season) குறிப்பிடும் முன்னிடைச் சொல்லாகப் பயன்படும்.
in Spring
in Summer
in Winter
in Autumn
இவற்றை சுட்டிடைச்சொல் "the" இட்டும் பயன்படுத்தலாம். ஆனால் "autumn" என்பதற்கு மட்டும் சுட்டிடைச்சொல் "the" பயன்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
in the spring (in the springtime)
in the summer (in the summertime)
in the winter (in the wintertime)
in autumn (in autumntime)
குறிப்பு: பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் "autumn" என்றழைப்பதை, அமெரிக்க ஆங்கிலத்தில் "fall" என்று அழைப்பர்.
"in" ஆண்டுகளை (Years) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in 2008
in 1990
in 2009
அதேவேளை in last year, in next year, in every year என்று குறிப்பிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இவற்றைக் குறிப்பிடும் போது முன்னிடைச்சொல் இன்றியே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
last year
next year
every year
"in" ஒரு நாளின் நேரங்களை (Times of the Day) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in the morning
in the afternoon
in the evening
- at night
மேலும் சில "in" முன்னிடைச்சொல்லின் பயன்பாடுகள்.
in the next century
in the Ice Age
in the past
in a few days
in a couple of months
"on" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்
திகதியை (Dates) குறிப்பிட முன்னிடைச்சொல்லாக "on" பயன்படும். அதேவேளை திகதியை தவிர்த்து மாதத்தையோ, ஆண்டையோ, அல்லது மாதத்துடன் ஆண்டை மட்டும் குறிப்பிடுவதாயின் "in" பயன்படுத்த வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
on January 3
on January 3, 2001
on 25 Dec. 2010
on 15th Augest 2009
கிழமை நாட்களை (Days of week) குறிப்பிட முன்னிடைச் சொல்லாக "on" பயன்படும்.
on Sunday
on Monday
on Tuesday
on Wednesday
on Thursday
on Friday
on Saturday
on Saturday morning
on Sunday afternoon
on Monday evening
விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களை (Holydays and Special days) குறிப்பிட முன்னிடைச்சொல் "on" பயன்படும்.
on Mother's day
on Velentine's day
on Christmas Eve/Day
on Independence Day
on New Year's Eve
on my birthday
on the first day of the school year
- at Christmas
வாக்கியங்களில் நேர முன்னிடைச்சொற்கள்
மேலே முன்னிடைச்சொற்கள் பயன்படும் விதங்கள் பற்றி கற்றோம். அவை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழுள்ள எடுத்துக்காட்டுக்களின் ஊடாகப் பார்ப்போம்.
The stars shine at night
நட்சத்திரங்கள் மின்னும் இரவில்
In England, it often snows in December.
இங்கிலாந்தில், அடிக்கடி பனிக்கொட்டும் டிசம்பரில்.
Do you work on Mondays?
நீ வேலை செய்கிறாயா திங்கள் கிழமைகளில்?
I will be there after work.
நான் அங்கிருப்பேன் வேலைக்கு பிறகு
I will be there around 3 pm
நான் அங்கிருப்பேன் கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில்.
I will be there before I go to school.
நான் அங்கிருப்பேன் பாடசாலைக்கு போவதற்கு முன்பு.
I have been riding my bicycle for 2 hours.
நான் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் எனது மிதிவண்டியை 2 மணித்தியாளங்களாக.
I will be there during your class.
நான் அங்கிருப்பேன் உனது வகுப்பு (நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்) நேரத்தில்.
I will be there for your birthday.
நான் அங்கிருப்பேன் உனது பிறந்த நாளைக்காக
I wasn't there for the past 2 months.
நான் அங்கிருக்கவில்லை கடந்த இரண்டு மாதங்களாக
I didn't see her since I was 10 years old.
நான் பார்க்கவில்லை அவளை எனது பத்து வயதில் இருந்து.
I will not be home until 7:00 PM.
நான் இருக்கமாட்டேன் வீட்டில் 7 மணி வரை.
I will be there within 2 hours.
நான் அங்கிருப்பேன் இரண்டு மணித்தியாளங்களுக்குள்.
இப்பாடத்துடன் தொடர்புடைய முன்னிடைச்சொற்களின் அட்டவணை (List of Prepositions) கொடுக்கப்பட்டுள்ளது. உச்சரிப்பு பயிற்சிக்கான ஒலிதக் கோப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக