2023/05/05

ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)



ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)


பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் "nouns” என அழைக்கப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் "nōmen" (பெயர்) என்ற சொல்லில் இருந்து மருவி ஆங்கிலத்தில் பயன்படும் சொல்லாகும்.

ஆங்கிலப் பெயர்சொற்கள் (Nouns) என்பன மனிதர்கள், இடங்கள், பொருற்கள், உயிரினங்கள், உணர்வுகள் போன்றவற்றை குறிப்பதற்கான "பெயர்கள்" அல்லது "பெயர்ச்சொற்கள்" ஆகும்.

இப்பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகளாவன:

 

 

Common Nouns

Proper Nouns

Countable Nouns

Uncountable Nouns

Collective Nouns

Concrete Nouns

Abstract Nouns

Compound Nouns


மேலும் இப்பெயர்ச்சொற்கள் பற்றி பார்ப்போம்.

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்

பொதுவான பெயர்சொற்கள் எனும் போது மக்கள், இடங்கள், பொருட்கள், உயிரினங்கள் அனைத்தினதும் பெயர்கள், பொதுவான பெயர்ச்சொற்கள் தான். தமிழில் இதனை "பொதுப் பெயர்ச்சொற்கள்" என அழைப்பதும் உண்டு.

இடங்கள்:
  • bank = வங்கி
  • school = பாடசாலை
  • city = பட்டணம்
  • shop = கடை
  • park = பூங்கா
பொருட்கள்:
  • pencil = பென்சில்
  • book = பொத்தகம்
  • chair = கதிரை
  • table = மேசை
  • bag = பை
உயிரினங்கள்:
  • tiger = புலி
  • bear = கரடி
  • fish = மீன்
  • snake = பாம்பு
  • dog = நாய்
மேலும் பொதுவானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்

குறிப்பிட்ட ஒரு பொருள், இடம், மனிதன், மதம், மொழி, மாதம், ஊர், நாடு போன்றவற்றின் உரித்தான பெயர்களையே "உரித்தானப் பெயர்ச்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன. உரித்தானச்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இடங்கள்:
  • London = இலண்டன்
  • Jaffna = யாழ்ப்பாணம்
  • California = கலிபோனியா
  • Kilinochchi = கிளிநொச்சி
  • Madurai = மதுரை
மனிதர்கள்:
  • Sarmilan = சர்மிலன்
  • Surya = சூர்யா
  • Tamilvaanan = தமிழ்வாணன்
  • Kavitha = கவிதா
  • David = டேவிட்
மொழிகள்:
  • Tamil = தமிழ்
  • English = ஆங்கிலம்
  • French = பிரஞ்சு
  • Chinese = சீனம்
  • Cantonese = கந்தோனிஸ்
மதங்கள்:
  • Hindu = இந்து
  • Christian = கிறிஸ்தவம்
  • Islam = இஸ்லாம்
  • Buddhist = பௌத்தம்
  • Taoism = டாவோயிசம்
மேலும் உரித்தானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.
  Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்

கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் தான்.

எடுத்துக்காட்டாக:
  • apple = குமழிப்பழம்
  • dollar = டொலர்
  • book = பொத்தகம்
  • spoon = கரண்டி
  • computer = கணனி
மேலும் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.
  Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாதச் சொற்கள் எல்லாமே "கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள்"  ஆகும்.

எடுத்துக்காட்டாக:
  • love = அன்பு / காதல்
  • water = தண்ணீர்
  • happiness = மகிழ்ச்சி
  • smoke = புகை
  • milk = பால்
மேலும் கணக்கிடாமுடியாப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.
  Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்

கூட்டம்  அல்லது குழுக்களின் (பலரின் அல்லது பலதின்) கூட்டினை குறிக்கும் பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • army = இராணுவம் (பல வீரர்களை குறிக்கும் சொல்)
  • class = வகுப்பு (பலர் கற்கும் இடம்)
  • gang = கும்பல் (பலரை குறிக்கும்)
  • colony = குடியேற்றப் பகுதி/ குடியேற்ற நாடு
  • school = பாடசாலை 
மேலும் கூட்டுப்பெயர்ச்சொற்கள் பாடத்தைப்  பார்க்கவும்.

Concrete Nouns - திடப் பெயர்சொற்கள்

கண்ணால் பார்க்கவும், கையால் தொடவும் கூடியவற்றை "திடப் பெயர்சொற்கள்" எனலாம். இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப் பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக:
  • tree = மரம்
  • ball = பந்து
  • nose = மூக்கு
  • face = முகம்
  • book = பொத்தகம்
மேலும் திடப் பெயர்ச்சொற்கள் பாடத்த்தினைப் பார்க்கவும்.

Abstract Nouns - நுண் பெயர்ச்சொற்கள்

நுண் பெயர்ச்சொற்கள் என்பன கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாத நுண்மையானவைகளாகும். அதனாலேயே அவற்றை "நுண் பெயர்ச்சொற்கள்" எனப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:
  • skill = திறமை
  • opinion = கருத்து
  • law = சட்டம்
  • ego = தன்முனைப்பு
  • peace  = அமைதி
மேலும் நுண் பெயர்ச்சொற்கள் அட்டவணை பார்க்கவும்.

Compound Nouns - கலவைப் பெயர்சொற்கள்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் சொற்களை அல்லது பெயர்களை "கலவைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • blackboard = கரும்பலகை
  • homeland = தாய்நிலம்
  • swimming pool  = நீச்சல் தடாகம்
  • brother-in-law = மைத்துனர்
  • haircut = தலைமயிர் வெட்டுதல்
ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்திருப்பதன் காரணம்; அவற்றை மாணவர்கள் எளிதாக கற்பதற்காகவே. மேலே வழங்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்கள் வகையில் இல்லாத "Gerund Nouns", "Predicate Nouns", "Noun as Adjective" போன்றவைகளும் உள்ளன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம்.

இன்றைய பெயர்ச்சொற்கள் பாடத்துடன் தொடர்புடைய பாடங்களை கீழே பார்க்கவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக