2023/08/03

இன்றைய 10 சொற்கள்!

இன்றைய 10 சொற்கள்!
1. Fawn (ஃபான்) - மான் கன்று.
இது ஒரு ஆறு மாத மான் கன்று.
It is a six-month old fawn.

2. Compete (கம்பீட்) - போட்டியிடு.
அவர் தொடர்ந்து பந்தயங்களில் போட்டியிடுவார்.
He regularly competes in races.

3. Dig (டிக்) - கிளறு.
அவர் தனது கடந்த காலத்தை கிளற விரும்பவில்லை.
He was unwilling to dig into his past.

4. Biodegradable (பையோடிகிரேடபுள்) - மக்கி அழிவன.
அவர்கள் பிளாஸ்டிக் மூடுவான் அல்லது கொள்கலனுக்கு பதிலாக ஒரு மக்கி அழியும் பையை உற்பத்தி செய்கிறார்கள்.
They produce a biodegradable bag instead of a plastic wrapper or container.

5. Faint (பெயிண்ட்) - மயக்கமடை.
அவள் திடீரென்று மயக்கமடைந்தாள்.
She suddenly faint.

6. Glad (கிலேடு) - மகிழ்ச்சி.
அவருடைய உதவிக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
I was quite glad of his help.

7. Immobile (இம்மொபைல்) - அசைவற்ற.
அவள் அசைவற்ற நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள்.
She sat immobile for a long time.

8. Plot (ப்லாட்) - சதி.
காவலர்கள் ஜனாதிபதிக்கு எதிரான சதித் திட்டத்தை கண்டு பிடித்தனர்.
Police uncovered a plot against the president.

9. Port (போர்ட்) - துறைமுகம்.
கப்பல் நான்கு நாட்களாக துறைமுகத்தில் இருந்தது.
The ship spent four days in port.

10. Meticulous (மெடிக்குலஸ்) - கவனம் மிக்க.
இந்த வேலைக்கு கவனம் மிக்க நபர் தேவை.
This job requires a meticulous person.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக